அரகஜா என்பது பல நன்மைகள் செய்யும் அரிய மூலிகைகளை புடம் போட்டு கருக்கி உடன் வாசனை திரவங்களை சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கருப்பு நிற அஞ்சனம் மையாகும். இதை பெரும்பாலும் கோவில்களில் கடவுள்களுக்கு பயன்படுத்துவர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி காண்போம்.
கோவில் உற்சவ சிலைகளுக்கு கண் திருஷ்டிக்கும் மற்றும் சிலை கண் திறக்க, சிலை பிரதிஷ்டை செய்யவும் , மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யவும், யாகம் மற்றும் பூஜை தெய்வ சக்தியை வரவழைக்க என பல கோவில் காரியங்களில் இந்த அரகஜா முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
நாட்டு மருந்து அல்லது பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் மிக சாதாரணமாகவே அரகஜா கிடைக்கிறது. இதன் விலையும் மிகவும் மலிவு தான். ஆனால் இதனுடைய பலன்கள் அபாரம் ஆனது ஆகும். இந்த அரகஜாவை பயன்படுத்தி நம் குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க முடியும்.
நம் வீட்டு பூஜை அறையில் கடவுள்களை வழிபடும்போது இந்த அரகஜாவை அபிஷேகத்தின் போது பயன்படுத்தலாம். கண் திருஷ்டி தீர இந்த அரகஜாவை பொட்டுபோல நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் அரகஜாவை வாங்கும் பொழுது எப்பொழுதும் இரண்டு டப்பாவாக வாங்கிக் கொள்ளுங்கள். ஒன்று உங்களுக்காக பயன்படுத்தவும் மற்றொன்று பூஜைக்காக பயன்படுத்தவும் என பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். அரகஜாவை நெற்றியில் இட்டுக் கொள்வதால் நமது சக்தி பன்மடங்கு அதிகரிப்பதாகவும் எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இந்த அரகஜா டப்பாவை திறக்கும் போது நமக்கு ஒரு தெய்வீக மனம் கிடைக்கும். நம் வீட்டு பூஜை அறையில் கடவுள்களுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்கும் போது பயன்படுத்தும் மஞ்சளில் இந்த அரகஜாவை கலந்து வைக்கும் போது நம் பூஜை அறையே கோவில் போல் தெய்வீக மணத்துடன் இருக்கும். இந்த அரகஜா மையை சுத்தமாக இருக்கும் போது தான் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நம் வாழ்வில் பல மாற்றங்களை இது ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.




