அரசுப் பள்ளி மாணவர்களுக்கான புதிய சீருடை வடிவமைப்பு, தமிழக முதலமைச்சரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று (ஜூலை 19) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய சீருடை வடிவமைப்பு தொடர்பான கோப்பு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




