தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால் அது ஆதவ் அர்ஜுனாவால்தான் வரும். கடந்த 10 நாட்களாக அவர் வாய் திறக்கவில்லை; ஏதோ நடக்கிறது. தமிழக வெற்றிக் கழக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது. அதை நாம் வீழ்த்த வேண்டிய அவசியமில்லை; ஆதவ் அர்ஜுனா ஒருவர் போதும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ். பாரதியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




