உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான ஓய்வுபெற்ற அரசு அதிகாரி அசோக் பஹார், தனது தாயாரின் 52 ஆண்டுகால மருத்துவக் கனவை நிறைவேற்றும் நோக்கில், மனைவியின் ஆதரவுடன் நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
நீட் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “கல்வி கற்க வயது ஒரு தடையல்ல” என்பதை வலியுறுத்தும் வகையில், மூத்த குடிமக்களுக்கு மருத்துவப் படிப்பில் 1 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அசோக் பஹாரின் முயற்சி கல்விக்கான வயது வரம்பு குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது.




