Oplus_131072
அல்சர் போன்ற வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும் தண்ணீர் விட்டான் கிழங்கு.. !!
தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு நம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. இது நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
இதற்கு சாத்தாவாரி, சதாவேரி, நீர்வாளி, நீர்விட்டான், வரிவரி, சதாமூலம், தண்ணீர் விட்டான், நாராயண முலி, சதாவேலி, சதமுலை, உதக மூலம், சீக்குவை, பறனை, பீருதந்தி என வேறு பல பெயர்களும் உள்ளன. இதன் தண்டு, வேர், இலை, கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டதாகும்.
தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தினால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் குணமாகும். நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
ரத்தத்தை சுத்திகரித்து நல்ல தூக்கத்தை தரக் கூடியது. குடல் வலி, வயிற்றுப் போக்கு, பசியின்மை போன்ற அனைத்தையும் குணமாக்க கூடியது. இது வெள்ளை வெட்டு நோய் தொந்தரவுகளில் இருந்து நம்மை காக்கும்.




