இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்குர், “விண்வெளிக்கு சென்ற முதல் நபர் அனுமன் தான்” என பேசியிருந்தார். இவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இந்நிலையில், இது குறித்து நேற்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர் சந்திப்பில் பேசிய மூத்த பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ‘விண்வெளிக்கு சென்ற முதல் நபர் அனுமன் என்று அனுராக் தாக்குர் நம்புகிறார். புராணத்தில் இருப்பதை கூறுவதில் எந்த தவறும் இல்லை ‘ என தெரிவித்துள்ளார்.




