புதிய தமிழகம் கட்சி 2021 தேர்தலில் தனித்து 60 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் பங்கு கொடுக்கிறதோ, அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு கொடுத்தால் அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.




