இந்த பதிவு ஆண்களுக்கு சமர்ப்பணம்..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

ஆண்களுக்கு சமர்ப்பணம்..!ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்..

ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமணப் பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்…!!

ஆண்களுக்கும் மாதாந்திர #வலி உண்டு
மாசக்கடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்..!!

ஆண்களுக்கும் #பிரசவ வலி உண்டு
மனைவி தலைப்பிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்..!!

ஆண்களுக்கும் #பயம் உண்டு
நேர்முகத்தேர்வில் குடும்பப் பொறுப்பை ஏற்று
அவர்கள் கேட்கும் நேரத்தில்..!!

ஆண்களுக்கும் #கற்பு உண்டு
காதலி இருக்கும் போது கண்டவள்
பேசும் நேரத்தில்..‌!!

ஆண்களுக்கும் #திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
அழும் நேரத்தில்..‌!!

ஆண்களுக்கும் #அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்..!!

ஆண்களுக்கும் #மானம் உண்டு
அலுவலகத்தில் நாலு பேர் முன்னே
மானேஜர் திட்டும் நேரத்தில்..‌!!

ஆண்களுக்கும் #அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்…!!

ஆண்களுக்கும் #தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்..!!

ஆண்களுக்கும் #நாணம் உண்டு
காதல் சொன்னதும் காதலி முகம்
பார்க்கும் நேரத்தில்..!!

ஆண்களுக்கும் #பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..‌‌!!

ஆண்களுக்கும் #உயிர் உண்டு
அந்த உயிரில் குடும்பம் மனைவி குழந்தை கலந்த நேரத்தில்..!!

ஆண்களுக்கும் மனம் உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த குடும்பத்தில் தன்னையே
அர்ப்பணித்து முழுதாய்
அன்பு செலுத்தும் ஜீவனும் உண்டு..!!

Read Previous

மாவட்டச்செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த திமுக முடிவு..!!

Read Next

ஆபாச கமெண்ட்.. இளைஞருடன் நடிகை குஷ்பு வார்த்தை மோதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular