ஆண்கள் பற்றிய உருக்கமான பதிவு..!! கண்டிப்பா படிங்க..!!

Oplus_131072

ஒரு அறிஞரிடம்
ஆண்கள் அழுவார்களா?
என ஒருவர் கேட்டார்.
ஆம், ஆண்கள் அழுவார்கள்.
என்றார் அறிஞர்
ஆண்கள் எப்போது அழுவார்கள்.?
என அவர் திரும்பிக் கேட்க
அறிஞர் கூறினார்:

தாய் இறந்தால் ஆண் அழுவான்
தந்தை இறந்தால் ஆண் அழுவான்

தங்கள் குழந்தைகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் ஆண் அழுவான்.

தன் மகள் திருமணம் ஆகி
பிரியும் போது ஆண் அழுவான்…

இனியவளைப் பிரியும் போது
ஆண் அழுவான்

ஆண், அவன் பிள்ளைகள் நன்றியியில்லாமல் ஆணவத்துடன் தன்னிடம் நடக்கும் போது அழுவான்.

தங்கள் குழந்தைகளுக்கான உணவு போன்ற அவர்களுக்குத் தேவையான வற்றைக் கொடுக்க முடியாமல் போனால் ஆண் அழுவான்.
தாயகத்தைப் பிரிந்து செல்லும் போது, அன்பானவர்கள் தன் அருகே இல்லாத போது ஆண் அழுவான்.

ஆண்கள் அழுகிறார்கள் ஆனால்…
எப்படி?
இருட்டில்…
பிறர் அறியாவண்ணம்…
தலையணைகளில்
முகத்தைப் புதைத்து…

ஆனால் அவனின்
கண்ணீர் கண்களிலிருந்து
கன்னத்தில் அனைவரும் பார்க்க
வண்ணம் வடியாது…
ஆனால் உள்ளம் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கும்

அவன் அழுது கொண்டு இருக்கிறான் என்பதை
அவன் அடிக்கடி விடும்
பெருமூச்சு ,
கண்களில் வெளிப்படும் ஏக்கம்
நடுங்கும் கைகள் வெளிப்படுத்தும்
ஆமாம்…..
ஆண்கள் இப்படித்தான்
அழுகிறார்கள்…
பிராத்தனையில் அழுகிறார்கள்.

*தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத் தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால்
உன் மனதை யார் அறிவார்*

கண்ணீரின் கருணை.

Read Previous

மூட்டு வலிக்கு உகந்த நல்ல கீரைகள் எது தெரியுமா..??

Read Next

எறும்பிடமும் பாடம் கற்கலாம்..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular