ஆண்கள் பெண்கள் என அனைவரும் கட்டாயமாக சாப்பிட வேண்டிய உளுந்தங்களி செய்வது எப்படி..??

Oplus_131072

உளுந்தங்களி செய்வது எப்படி….

செய்யத்தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து-1 கோப்பை
பச்சரிசி-1 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் -2 மேஜைக்கரண்டி (நெய் 1 மேஜைக்கரண்டி சுவை சேர்க்க)
கருப்பட்டி-1/2 கோப்பை
வெல்லம் -1/4 கோப்பை
(கருப்பட்டி மட்டும் சேர்த்தும் செய்யலாம் )

செய்முறை:

முதலில் உளுந்தை மனம் வரும் வரை வருத்துக்கொள்ளவும், அரிசியையும் வருத்து இரண்டையும் சேர்த்து நல்ல மென்மையான மாவாக பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, கருப்பட்டி, வெல்லம் சேர்த்து 1 கோப்பை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும் கொதிக்கும் சமயம் இறக்கி வடிகட்டி சிறிது ஆறவைத்துக்கொள்ளவும். (இப்படி செய்யும் போது மாவு கட்டி தட்டாமல் இருக்கும்)
வைத்துள்ள வெல்லப்பாகில் மாவை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து பின்னர் அடுப்பில் இளந்தீயில் வைத்து கிளரவும்.
இடை இடையே நல்லெண்ணெய் சேர்த்து கட்டி தட்டாமல் களி பக்குவத்திற்கு வரும் வரை கிளறி இறக்கவும்
வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் சமயம் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையும் மனமும் சிறப்பாக இருக்கும்.

 

Read Previous

Sunday சமையலுக்கு நண்டு வாங்கினீங்கன்னா கண்டிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

Read Next

பித்தப்பையில் கல் உருவாக காரணமாகும் முக்கிய காரணிகள் இவைதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular