ஆண்மை குறைவுக்கு முதல் எதிரியே வேலைப்பளு தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் வேலைக்கு போக காரணமாக அதீத பதற்றம் மன உளைச்சல் இவற்றை ஆண்மை குறைவினை ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளனர்..
உலக தாம்பத்திய நல தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், திருமணத்திற்கு பிறகும் தாம்பத்திய உறவில் திருப்தியும் சந்தோசமும் இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சி ஒன்று வெளிவந்துள்ளது, மேலும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனையும் பெண்களுக்கு கருத்தரிப்பு பிரச்சனைகளும் ஏற்படுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது, இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் அதிகமான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் சுற்றுச்சூழல் மாசுபாடு இதனைத் தொடர்ந்து ரசாயன பொருட்களின் உபயோக அதிகரித்து வருவதாலும் ஆண்மை குறைவு மற்றும் கருத்தரிப்பு நிகழ்வுகள் தாமதமாகியும் வருவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது, உடல் மற்றும் மன ஆரோக்கியமே ஆண்மை தன்மையை அதிகப்படுத்துகிறது என்றும் கருத்தரிப்பை மேன்மைப்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வில் வெளிவந்துள்ளது..!!




