ஆதார் கார்டு தொடர்பாக UIDAI ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 7 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் சரிபார்ப்புக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கு அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்துள்ளது. அக்.1ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண விலக்கு, 5 முதல் 17 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் பயோமெட்ரிக் புதுப்பித்தலை இலவசமாக்குகிறது. இதனை பெற்றோர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.




