யார் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததைக் கண்டு பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார், மேலும் யார் இந்தியா விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார் பயணி..
வீட்டைக் கடந்து வெளியில் சாப்பிடும் பொழுது ஏதோ ஒரு இடத்தில் உணவுகளில் இறந்த பூச்சிகளை அல்லது உயிர்களை நம்மால் காண முடியும், இதற்கு சமைப்பவர் சரியான கவனமின்றி சமைப்பது தான் காரணமா இல்லை அலட்சியமா என்று தெரியவில்லை அப்படி தற்சமயம் நடந்து முடிந்துள்ள சமோசாவில் எலி இருந்தது பெரிதும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது யார் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்டுள்ள உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, கடந்த 15ஆம் தேதி சுயிஷா சாவத் என்ற பெண் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியில் இருந்து நியூயார்க் சென்றார், அப்பொழுது விமானத்தில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்துள்ளது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் விமான ஊழியரிடம் புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக புகைப்படம் வைரலாகி வருகிறது..!!




