ஆரஞ்சு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இந்த நவீன காலகட்டத்தில் பழங்களை தினமும் நம் உணவில் சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமான செயல். இந்நிலையில் பலரும் தினமும் ஒரு பழமாவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பலரும் சத்தான உணவு முறைகளை குறிப்பாக பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இந்நிலையில் ஆரஞ்சு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும். அதுமட்டுமின்றி கொலஸ்ட்ரால் குறையும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். சருமம் பொலிவாகும். உடல் எடை குறைய உதவும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவதால் 50% புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைய அதிகமான வாய்ப்பு உள்ளது.




