சிறுகதை..!! தான் மட்டுமே புத்திசாலி என்று நினைக்கக் கூடாது என்பதை உணர்த்தும் அற்புதமான பதிவு..!!

Oplus_131072

ஒரு விவசாயி கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார், மறுநாள் அந்த கிணற்று தண்ணீரை தனது தோட்டத்திற்கு பாய்ச்ச ஆயத்தமானார்,

அப்போது கிணறு விற்றவர் குறுக்கிட்டு, உனக்கு கிணறு மட்டுமே விற்றேன், அதில் இருக்கும் தண்ணீரை விற்கவில்லை, கிணத்துல இருக்கும் தண்ணீரும் வேண்டுமென்றால் நீ மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று புத்திசாலித்தனமாக வாதிட்டார்,

பொறுமை இழந்த அந்த விவசாயி, இப்படியொரு வியாபாரத்தை நான் இதுவரை பார்த்ததில்லை, முன்னரே இதை சொல்லிருந்தால் நான் கிணறே வாங்கியிருக்க மாட்டேனே என்று வாதிட்டார், வழக்கு ஊர் பஞ்சாயத்திடம் சென்றது, கிணறு விற்றவர் பஞ்சாயத்திடமும் தனது புத்திசாலித்தனமான வாதங்களை முன் வைத்தார், இரு பக்கமும் விசாரித்த ஊர் தலைவர்,

“கிணறு விற்கும்போது விதிமுறை இன்றிதான் விற்கப்பட்டிருக்கிறது, கிணற்றில் இருக்கும் தண்ணீரை எடுத்துவிட்டு காலியான கிணற்றை தான் விற்றிருக்க வேண்டும், இப்போது அவருடைய கிணத்துல இருக்கும் உங்களுடைய தண்ணீரை வெளியே எடுத்துவிடுங்கள் அல்லது அதற்கான வாடகை தொகையை மாத மாதம் அந்த விவசாயிக்கு கொடுத்துவிடுங்கள், என்று தீர்ப்பு வழங்கினார்,

யோசித்து பார்த்து கணக்கு போட்டு பார்த்தவர், கிணற்றில் இருக்கும் தண்ணீரை அவரே எடுத்துக்கொள்ளட்டும் தலைவரே!!! என்று ஆளை விட்டால் போதும் என ஓடிபோய்விட்டார்.

நீதி:
தான் மட்டுமே புத்திசாலி என வாதிட்டால் நீங்கள் தோற்றுதான் போவீர்கள், தன்னை விடவும் புத்திசாலிகள் இருக்கிறார்கள் என மனதளவிலாவது ஒப்புக்கொண்டால் மட்டுமே வெற்றி பெறுவீர்கள்.

Read Previous

ஆரஞ்சு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

அரை மூடி தேங்காயும் 5 பேரிச்சம் பழமும் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular