ஆவின் நெய் விலை உயரவில்லை: வதந்திகளுக்கு ஆவின் நிர்வாகம் மறுப்பு..!!

ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட விளக்கத்தில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆவின் நெய் தற்போதைய சில்லறை விலையிலேயே எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டதாக பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், அதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆவின் தயாரிப்புகளின் விலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நிர்வாகம் வெளியிடும் தகவல்களின் மூலமே உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Previous

காசிமேட்டில் மீன் விலை தொடர்ந்து உச்சம்: ஏற்றுமதியால் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு..!!

Read Next

தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாடு: முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular