இதே போல் ஒரு முறை பாயா வைத்து பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும்..!!

Oplus_131072

இதே போல் ஒரு முறை பாயா வைத்து பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும்

ஒரு குக்கரில் சுத்தம் செய்த ஆட்டு கால சேர்த்து
அதில் இஞ்சிபூண்டு விழுது ,
ஒரு தக்காளி ,
ஒரு வெங்காயம் ,
ஒரு ஸ்பூன் மல்லித்தூள்
உப்பு சேர்த்து
15 விசில் வைத்து வேகவைச்சு எடுத்துக்கொள்ளுங்கள்

ஒரு மிக்ஸிஜரில் 2 சில்லு தேங்காய் ,
5 முந்திரி ,
ஒரு ஸ்பூன் சோம்பு ,
ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை ,
அரைஸ்பூன் சீரகம் சேர்த்து
மை போல் அரைத்து எடுத்துவைக்கவும்

இன்னொரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை ,
கிராம்பு,
ஏலக்காய் ,
சேர்த்தி தாளித்து ஒரு வெங்காயம் ,
ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் ,
ஒரு கை புதினா சேர்த்து
நன்கு வதக்கிவிடவும் பிறகு
ஒரு தக்காளி ,
2 பச்சைமிளகாய் ,
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ,
ஒரு ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கி விடவும்

பிறகு வேகவைத்த ஆட்டுக்காலை தண்ணீருடன் சேர்த்து , அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான தண்ணீர் , உப்பு கலந்து
7 விசில் வேகவைத்து

கடைசியில் மல்லித்தழை , ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து இறக்கினால் ஆடுகால் பாயா ரெடி அவலோன் சுவை..

Read Previous

மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை..!!

Read Next

பணியாரம் சாப்பிட்டு இருப்பீங்க.. ஆனால் ரவா பணியாரம் சாப்பிட்டு இருக்கீங்களா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular