இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், மக்களவையில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்தியா கூட்டணியின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான திமுக கலந்து கொள்ளாதது குறித்து பல்வேறு அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், திமுக கூட்டத்தைப் புறக்கணித்ததற்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியாகவில்லை. கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘இது 56 வயது இளைஞர்களுக்கான காலம் அல்ல’ – பிரதமர் மோடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular