நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘இது 56 வயது இளைஞர்களுக்கான காலம் அல்ல’ – பிரதமர் மோடி..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

அப்போது, இந்திய இளைஞர்களின் திறன் மற்றும் சாதனைகளைப் பாராட்டிய அவர், சமீபத்தில் 28 வயதுடைய இளைஞர்கள் குழு தனியார் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதைக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, “28 வயதே ஆன இளைஞர்கள் இணைந்து தனியார் ராக்கெட்டை ஏவியுள்ளனர். இந்தியாவில் இது உண்மையிலேயே சாதிக்கும் இளைஞர்களுக்கான காலம்; 56 வயது இளைஞர் எனக் கூறிக் கொள்பவர்களுக்கான காலம் அல்ல” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அவரது இந்தக் கருத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

Read Previous

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை..!!

Read Next

மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தினால் பதவி பறிப்பு: அமைச்சர் என். ஆனந்த் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular