ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த குழந்தையின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயங்கள் இருந்ததை கவனித்த மருத்துவமனை நிர்வாகத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், குழந்தையைக் கொலை செய்ததாக அதன் பாட்டி தங்கமணி (47) மீது சந்தேகம் உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




