இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவங்களுக்கு இடையேயான 15-வது கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தின் சூரத் தானி பகுதியில் நாளை (ஆக.18) தொடங்குகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், இரு நாடுகளையும் சேர்ந்த தலா 85 ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தப் பயிற்சியில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், கூட்டு பாதுகாப்பு உத்திகள் மற்றும் இரு நாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
நட்பு நாடுகளுடன் தொடர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.




