திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி கொலை? சாக்குப்பையில் இளம்பெண் சடலம் மீட்பு!

 

 

ஹைதராபாத் பாலாபூர் பகுதியில் சாக்குப்பையில் இளம்பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில், உயிரிழந்தவர் பீகாரைச் சேர்ந்த ரெஹானா (21) என்பது தெரியவந்தது. திருமணம் செய்து கொள்ளுமாறு ரெஹானா வற்புறுத்தியதால், அவரது காதலன் அகமது சலாம் கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

பின்னர் சடலத்தை சாக்குப்பையில் வைத்து வீசியுவிட்டு அகமது சலாம் தப்பியோடியதாக கூறப்படுகிறது. ரெஹானாவின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய அகமது சலாமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read Previous

“கருக்கலைப்பு பெண்ணின் உடல் உரிமை!” – சட்டப்பேரவைத் தலைவருக்கு CPI கண்டனம்!

Read Next

இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி: நாளை தொடக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular