பிளாஸ்டிக் நோட்டுகள் சாதாரண பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதில்லை. இவை BOPP (Biaxially Oriented Polypropylene) எனப்படும் சிறப்பு பாலிமர் பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், தண்ணீர், அழுக்கு மற்றும் வெப்பத்தை ஓரளவு தாங்கும் தன்மை கொண்டவை.
மனித உடலின் இயல்பான வெப்பநிலையான 37°C அல்லது கோடை கால வெப்பம் போன்றவற்றால் இவை உருகவோ, உடனடியாக சேதமடையவோாது. அதனால் சட்டைப்பை அல்லது பர்ஸில் வைத்திருப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது.
ஆனால் நேரடி தீ, அதிக வெப்பம் அல்லது அயர்ன் பாக்ஸ் போன்ற மிக அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது பாலிமர் பொருள் சேதமடையக்கூடும்.
அதனால், பிளாஸ்டிக் நோட்டுகள் நீடித்து உழைத்தாலும், அதிக வெப்பத்திலிருந்து அவற்றை பாதுகாப்பது அவசியம்.




