ஜோர்டான் நாட்டின் மன்னர் II-ம் அப்துல்லா பின் அல் ஹுசைன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று நாளை அரசுமுறைப் பயணமாக சீனா செல்கிறார்.
தனது 9-வது சீனப் பயணத்தின் போது அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் அவர், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல், சர்வதேச அரசியல் நிலவரம் மற்றும் இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
தொடர்ந்து ஷாங்காய் மற்றும் ஷென்சென் நகரங்களுக்கும் செல்லும் ஜோர்டான் மன்னர், தனது சீனப் பயணத்தை நிறைவு செய்து ஆகஸ்ட் 24-ம் தேதி நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




