இந்தியா வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 1965ல் பிறந்தார், இவரின் சாதனைகள் ஏராளம்..
2006 இல் டிஸ்கவரி என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு முதல் பயணம் சென்றுள்ளார், விண்வெளியில் நீண்ட நேரம் நடந்த சாதனை படைத்துள்ளார், முதல் விண்வெளி பயணத்தின் போது 194 நாட்கள் விண்வெளியில் செலவழித்து சாதனை படைத்துள்ளார், விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார், அதேபோல் 2007 இல் விண்வெளியில் பாஸ்டன் மாரத்தான் ஓடிய முதல் நபர், 2008இல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் மத்திய அரசின் பத்மபூஷன் விருது பெற்றவர், அதேபோல் 2012ல் இரண்டாவது முறையாக விண்வெளிக்கு பயணம் செய்து இதில் ஐஎஸ்எஸ் தளபதியாக பணியாற்றியவர், 2013இல் குஜராத் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டினம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார், 2024 இல் மூணாவது முறையாக விண்வெளிக்கு புச் வில்மோருடன் பயணம் செய்துள்ளார் மின்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதால் இவரும் தற்போது வரை அங்கேயே உள்ளார், மேலும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்ப இருக்கின்றனர், இந்தியாவிற்கு பல பெருமை சேர்த்துள்ள அமெரிக்கர்..!!




