இந்த இதய ரேகை வைத்து உங்கள் ஆளுமையை கூறலாம்-இதில் உங்கள் ரேகை எப்படி?..

நம் உடலின் ஒவ்வொரு பாகங்களும் நம்மை பற்றி கூறும் கருப்பொருளாக படைக்கப்பட்டவை. அது ரத்தம் முதல் தசை வரை எதுவாக இருந்தாலும் சரி.

 

 

அந்த வகையில் இதய ரேகை என்பது உள்ளங்கையில் உள்ள வாழ்க்கைக் ரேகைக்கு மேலே அமைந்துள்ள ஒரு முக்கிய ரேகையாகும்.

இது ஒரு நபரின் உணர்ச்சி இயல்பு, வாழ்க்கைக்கான அணுகுமுறை, தொழில் தேர்வுகள் மற்றும் உறவு பாணி பற்றிய நுண்ணறிவுகளை கூறுமாம்.

எனவே மனிதர்களுக்கு இருக்கும் இந்த இதய ரேகைகளை வைத்து அவர்களின் ஆற்றல் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

  உங்கள் இதய ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

 

உங்கள் இடது கையின் இதயக் ரேகை வலது கையை விட உயரமாக இருந்தால் , உங்கள் ஆளுமை மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

நீங்கள் மிகவும் உள்ளுணர்வு கொண்டவராகவும் இருப்பீர்கள். நீங்கள் ஒரு சுதந்திரமான நபராக இருப்பீர்கள்.

நீங்கள் உங்களுக்கு பிடித்த தனிப்பட்ட ஆசையை தான் எப்போதும் பின்பற்றுவீர்கள். சமூகத்தின் இணக்கப்பாடு உங்களிடம் குறைவாக இருக்கும்.

நீங்கள் எப்போதும் தனிமையை விரும்புவீர்கள். உங்களுக்கு நண்பர்கள் வட்டம் மிகவும் குறைவாக இருக்கும்.

ஆனால் யாரை பார்த்தாலும் உடனே பழக்கப்படுத்தி கொள்ளும் சக்தி உங்களிடம் இருக்கும்.

 

இரு கைகளிலும் உள்ள இதயக் கோடுகள் ஒரே சீராக இருந்தால் , நீங்கள் இணக்கமான மற்றும் சமநிலையான ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள்.

உங்களிடம் சமாதானம் என்பது நிறைவாகவே இருக்கும்.

நம்பிக்கைக்கும் இரக்கத்திற்கும் அடிப்படையான நபர் நீங்கள் தான்.

மோதல் சண்டையில் பிரிந்தவர்களை உங்களால் சேர்த்து வைக்க முடியும். அந்த இயல்பு உங்களிடம் உள்ளது.

உங்கள் புரிதல் மற்றும் பச்சாதாப இயல்பு காரணமாக பெரும்பாலானோர் உங்கள் ஆலோசனை கேட்க உங்களை நாடுவார்கள்.

சவாலான சூழ்நிலைகளிலும் கூட, நீங்கள் பெரும்பாலும் அமைதியாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.

உங்களை விட நீங்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

 

வலது கையின் இதய ரேகை இடது கையை விட உயரமாக இருந்தால், நீங்கள் எல்லா விடயத்திலும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பீர்கள்.

நீங்கள் பொறுப்பான ஒரு நம்பிக்கையான நபராக மற்றவர்களுக்கு காணப்படுவீர்கள்.

வாழ்க்கையை நடைமுறை மற்றும் தர்க்கரீதியான மனநிலையுடன் அணுகுவீர்கள்.

என்னதான் மற்றவர்கள் உங்களை குழப்பினாலும் நீங்கள் தெளிவாக முடிவெடுப்பீர்கள்.

வேலைகளை திட்டமிட்டு செய்யும் திறன் உங்களிடம் அதிகம் இருககும்.

உங்கள் சொந்த உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் நீங்கள் அறிந்து மதித்து நடப்பீர்கள்.

Read Previous

ரத்த சோகையால் அவதிப்படுறீங்களா?.. தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்க..!!

Read Next

திருநீற்று பச்சிலை ஒரு தெய்வீக மூலிகை..!! திருநீற்றுப்பச்சிலையின் பயன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular