நாம் அன்றாட வாழ்வில் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை குடித்து வந்தால் ரத்த குழாயில் கொழுப்பு படிவதை தவிர்க்கலாம். மேலும் முட்டைக்கோஸ் சாப்பிடுவதன் மூலம் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க முடியும். பூசணிக்காய் சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமையும். தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இரு முறை முருங்கைக்கீரை உண்டு வந்தால் உடல் தேறும் மற்றும் இரத்தம் சுத்தம் அடையும். பூவரசு பூவை எடுத்து சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து வெடிப்பு மீது தடவி வந்தால் பித்த வெடிப்பு குறையும். இந்த மருத்துவ குறிப்புகள் எல்லாம் கட்டாயம் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்.




