Oplus_131072
பொதுவாக மருத்துவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பலருக்கும், பரிந்துரைக்கும் உணவு இட்லிதான். எண்ணெய் சேர்க்காமல் நீராவியில் வேக வைப்பதால் இது எளிதில் செரிமானமாகி விடும் என்ற காரணத்தினால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உணவாக உண்ணும் உணவாக இருக்கிறது. இந்நிலையில், அப்படி நாம் உடலிற்கு நல்லது என்று நினைத்து சாப்பிடும் இட்லியே உடல்நலக் குறைவை உருவாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இன்ஸ்டன்ட் இட்லி மாவினால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இட்லி மாவு அரைத்தவுடன் கிரைண்டரை உடனடியாகக் கழுவிக் காய வைத்து விடுவோம். மீண்டும் அதற்கு முன்பாக கழுவி சுத்தம் செய்து விட்டு அதில் இருக்கும் தண்ணீரைக்கூட துடைத்து எடுத்துவிட்டு தான் மீண்டும் அவரைப்போம். ஆனால் இட்லி மாவு அரைக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து மாவு அரைப்பதால் மாவு அரைக்கும் இயந்திரத்தை கழுவுவது இல்லை.
எப்பொழுதாவது தான் சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஈகோலி என்ற பாக்டீரியாக்கள் மாவில் புகுந்து விடுகிறது. இதனால் உடல் வறட்சி, வயிற்றுவலி, வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், சில நிறுவனங்கள் மாவு கெட்டுப் போகாமல் இருக்க கால்சியம் என்ற வேதிபொருளை அந்த மாவில் கலக்கின்றனர். இதனை தொடர்ந்து உணவில் உபயோகித்து வந்தால் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை உண்டாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




