மதுரை வாடிப்பட்டியில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
“தீய சக்தியான திமுகவை முதலமைச்சர் விஜய் ஒழித்துவிட்டார். இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகிவிடுவார்கள்” என அவர் கூறினார்.
மேலும், அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும் என்றும், முரசொலி டிரஸ்ட்டை கைப்பற்றுவதற்காக குடும்பத்திற்குள் போட்டி நடைபெற்று வருவதாகவும் அவர் விமர்சனம் முன்வைத்தார்.
அமைச்சர் நிர்மல் குமாரின் இந்தக் கடுமையான விமர்சனங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.




