திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

நாகை மாவட்டம் ஆலந்தூரில் இருந்து சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிலர் மினி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

மதுரை–கப்பலூர் சுற்றுச்சாலையில் பாலத்தில் ஏற முயன்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

“அடுத்த நூற்றாண்டிலும் திமுக உயிர்ப்போடு இருக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின்!

Read Next

“இன்னும் 2 ஆண்டுகளில் திமுக அரசியலை விட்டு விலகும்” – அமைச்சர் நிர்மல் குமார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular