இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் 23 ஆண்டுகளை தற்போது நிறைவு செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக அக்டோபர் 7 2001 ஆம் ஆண்டு அன்று குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்திய பிரதமராக உள்ளவர் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் தொடர்ந்து இருபத்தி மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் நான் ஒரு அரசாங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்காக வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் எனவும் அக்டோபர் 7 2001 அன்று தான் நான் குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Read Previous

முடி வளர்ச்சி முதல் மூலம் வரை… இத்தகைய நோய்களை அடித்து விரட்டும் சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய மருத்துவ பயன்கள்..!!

Read Next

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை..!! மகிழ்ச்சியில் கட்சியினர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular