உலகம் எங்கும் சிவராத்திரி என்பது மிகவும் விசேஷமாகவே இருக்கும் அப்படி இருக்கையில் ஆடி மாதத்தில் இன்று ஆடி சிவராத்திரி மிகவும் விசேஷமான நாளாக போற்றப்படுகிறது, குறிப்பாக 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆருத்ரா நட்சத்திரங்களில் இன்று (ஆகஸ்ட் 2) கொண்டாடப்படுகிறது.
இந்த சிவராத்திரி வருடாந்திர சிவராத்திரி என்று கூட அழைப்பதுண்டு சிவராத்திரி நாளன்று எள் வைத்து சிவபெருமானை வணங்குவதனால் செல்வம் பெருகியும் ஆரோக்கியமும் நிறைந்தும் இருப்பது என்பது ஐதீகம், இந்த நாளில் ஏழைகளுக்கு இனிப்பு, பால், பழம், வஸ்திரம், என வழங்குவதனால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றும் இன்று வீட்டில் பூண்டு, வெங்காயம் சமைத்து சாப்பிடக்கூடாது என்றும் இப்படி இருப்பதனால் சிவபெருமான் தரிசனம் நேரடியாக நம் வீட்டில் மேல் படும் என்று ஐதீகம் கூறுகிறது..!!




