இன்றைய நவீன உலகில் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அந்த வகையில் உலக மக்கள் தொகையில் 531 கோடி பேர், அதாவது 64.7% மக்கள் சமூக வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தும் ஆப்களில் யூடியூப் முதல் இடத்திலும், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. உலக அளவில் சுமார் 174 கோடி பேர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் நிலையில், அதில் இந்தியர்கள் மட்டுமே 41.1% மக்கள் உள்ளனர்.




