திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 16 வயதான கூலித்தொழிலாளியின் மகள், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சிறுவனுடன் பழகி வந்துள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு மின்சார ரயிலில் தாலி கட்டிக்கொண்டார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றபோது 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




