மக்களவை தேர்தலின் தோல்விக்கு பிறகு, சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்தால் அது பெரிய பின்னடைவு ஏற்படுத்தும். இதனால், இபிஎஸ்-ன் தலைமை கேள்விக்குள்ளாகலாம். இதனால், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தற்போது அதிமுக, விஜய்யை நம்பியே இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் ஆதரவு இபிஎஸ்-க்கு ஒரு பெரிய முன்னேற்றமாக அமையலாம். பாமக, தேமுதிக இன்னும் முடிவெடுக்காத நிலையில், விஜய் கட்சி தவிர அதிமுகவுக்கு வேறு ஆப்ஷன் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.




