இரத்தத்தை சுத்தமாக்க எளிய ஏழு வழிகள் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

நமது உடலில் உள்ள இரத்தம் சுத்தமாகவும், இரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை விகிதம் சரியானதாகவும் இருந்தால்தான் உடல் நோயின்றி வாழமுடியும். இதற்கு உணவு முறைகள் மிகவும் அவசியமாகும்.

எனவே ரத்தத்தை சுத்தமாக்கும் எளிய வழிகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

1. இரத்தம் சக்திமிகு திரவமாக இருக்க முங்கைக் கீரை, மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழைப்பூ, நாவல் பழம், உலர்ந்த திராட்சை, முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவை அடிக்கடி உணவில் சேர்த்து வர, இரத்தம் சுத்தம் ஆவதோடு, அதிகரிக்கவும் செய்யும்.

,2. புளிச்சக்கீரையை துவையலாக செய்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்தி அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.

3. இஞ்சியை நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தமாக்குவதுடன் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும்.

4. இலந்தைப் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

5. தினமும் உணவில் பூண்டு சேர்த்து வர, இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் , பூண்டு இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது.

6. மஞ்சளை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இரத்தம் உறைவது தடுக்கப்படுவதோடு, உடலில் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும் மஞ்சள் இரத்தத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக்கும்.

7. கடுக்காய்ப்பொடி 5 கிராம், கிராம்பு பொடி 4 கிராம் இரண்டையும் சேர்த்து 100 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சிறிதளவு நெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க 2,3 தடவை பேதியாகும்.

இது போல் 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது அவ்வப்போது செய்து வர இரத்தத்தை தூய்மையாக்கும்.

Read Previous

பெற்றோர்கள் கவனத்திற்கு இந்த பதிவு..!! கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியம் இதுதான்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular