இரவு நேரத்தில் என்ன சாப்பிடலாம் என்று பலருக்கும் யோசனை இருந்து கொண்டே இருக்கும், வீட்டில் சமைக்கும் பெண்களுக்கு இதுவே பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்னவென்றால் இரவு நேரத்தில் என்ன சமைப்பது என்று தான் இட்லி தோசை ஏதோ ஒன்று செய்வதற்கு எத்தனையோ யோசனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும், தீர்வு தான் இவை…
இரவில் உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கும் நேரம் அப்போது நினைத்ததை எல்லாம் சாப்பிட்டால் அது அஜீரண பிரச்சனையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர், சோலா பூரி பரோட்டா பிரியாணி அசைவ உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் மற்றும் மைதானங்கள் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாதவைகள், மேலும் இரவு நேரத்தில் சாப்பிட கூடிய உணவு முறைகளில் இட்லி, இடியாப்பம், ஓட்ஸ் கஞ்சி, தோசை, ஆப்பம், காய்கறி சாலட், பழங்கள் பழச்சாறுகள் சாப்பிடலாம் என பரிந்துரைக்கின்றனர், மேலும் இரவு நேரங்களில் செரிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் பொழுது உடல் ஆரோக்கியமாகவும் இரவு நேரத்தில் நல்ல உறக்கமும் வரும்..!!




