இருமல் மருந்து எப்போது ஆபத்தாகிறது..?? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!

Oplus_131072

இருமல் மருந்து எப்போது ஆபத்தாகிறது? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

 

1. குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா?

2. சிறுநீரக பாதிப்பு ஏன்?

3. சளி, இருமலை போக்க என்ன செய்யலாம்?

4. இருமல் மருந்து வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்?

5. இருமல் மருந்து வாங்கும்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது

6. எப்போது மருத்துவரை அணுகலாம்?

குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கலாமா?

சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு Over the counter மருந்துகளை (அதாவது மருந்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கப்படும் மருந்துகள்) பரிந்துரைக்க வேண்டாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.
ஏனெனில் இது தீவிரமான மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகளுக்கு மருந்துவர்களின் பரிந்துரைகளின்றி சளி மற்றும் இருமல் மருந்துகள் வாங்குவது ஆபத்து எனவும் எஃப்டிஏ (FDA) எச்சரித்துள்ளது. இதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது.
ஏனெனில்,

* அந்த மருந்தில் குழந்தைகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் இருக்கலாம் அல்லது இந்த மருந்தை அடிக்கடி எடுத்துக்கொள்வதாலும் பாதிப்பு ஏற்படலாம்.

* அவர்கள் ஒரே மருந்தை உடைய 2 பொருட்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். உதாரணமாக அசிடமினோபன் கொண்ட வலி நிவாரணியை பயன்படுத்தும் அதே வேளையில் அதே அசிடமினோபன் கொண்ட சளி மருந்தையும் எடுத்துக் கொள்வது ஒரு காரணம்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு தானாகவே இருமல், சளி சரியாகிவிடும். அதேசமயம் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சரியான அளவில், முறையாக மருத்துவர்களின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்வது சிறந்தது

அதேபோல சரியான அளவில் மருந்தை உட்கொள்வதும் அவசியம். இதை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,

* மருந்தை உட்கொள்வதற்கும், அதை அளப்பதற்கும் மூடி போன்றவற்றை மருந்துடன் சேர்த்து விநியோகிக்க உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

* மருந்தை அளவீடு செய்ய வீட்டில் உள்ள கரண்டிகள் அல்லது பிற மருந்துகளில் இருந்து வரும் கருவிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* பெரியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். ஏனெனில் இதன் அளவுகோல் மாறுபடும்.

சிறுநீரக பாதிப்பு ஏன்?

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்டதால் உயிரிழந்த குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து மருத்துவர் சந்தீப் பாஃப்னாவிடம் கேட்டபோது, “மருந்து தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் டைஎத்திலின் கிளைகால் (diethylene glycol), எத்திலின் கிளைகால் (ethylene glycol) போன்றவற்றின் மூலக்கூறுகள் நம் உடலில் உள்ள சிறுநீரகக் குழாயை (renal tubule) பாதிக்கும்.”சிறுநீரகக் குழாய் (Renal tubule) என்பது தேநீர் வடிகட்டியைப் போல, இது சிறுநீரகத்தின் வடிகட்டியாகும். டைஎத்திலின் கிளைகால் (diethylene glycol), எத்திலின் கிளைகால் (ethylene glycol) மூலக்கூறுகளால் சிறுநீரகத்தின் சுத்திகரிப்பு தன்மை பாதிக்கப்படும். இதனால்தான் சிறுநீரக கோளாறு, கல்லீரல் பிரச்னை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன

சளி, இருமலை போக்க என்ன செய்யலாம்?

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சளி, இருமலை குணப்படுத்துவதற்கான சில வழிகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

* Cool mist humidifier அதாவது அறையை ஈரப்பதமாக்கும் ஒரு வித கருவி. இதை பயன்படுத்துவதன் மூலம் மூக்கடைப்பை போக்கலாம்.

* Saline nose drops or sprays: மூக்கு வழியாக செலுத்தக்கூடிய மருந்துகளை பயன்படுத்தலாம். இது மூக்கடைப்பை தவிர்க்க உதவும்.

* மூக்கு வழியாக செலுத்தக்கூடிய Bulb syringe-ஐ பயன்படுத்தலாம். இது 1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நல்ல பலனளிக்கும்.

* அசிடமினோபன் அல்லது இப்யூபுரூஃபன் மருந்துகளையும் பயன்படுத்தலாம். இது காய்ச்சல் மற்றும் வலிகளை குறைக்கும். ஆனால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் அட்டையை கவனமாக படிக்க வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையும் அவசியம்.

* முடிந்தளவிற்கு குழந்தைகள் அதிக நீர் ஆகாரங்களை உட்கொண்டு நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இருமல் மருந்து வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்?

ஒருவரின் வயது, உடல் எடையைப் பொறுத்து இருமல் மருந்தின் அளவு மாறுபடும். பெரியவர்களுக்கு (adult) பரிந்துரைக்கும் மருந்து அளவை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சியடைந்திருக்கும். அதேசமயம் குழந்தைகளுக்கு சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சியடைந்தியடைந்திருக்காது. இதனால் இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.” இருமல் மருந்து வாங்கும்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது

செய்யக்கூடாதவை:

* முதலில் வைரஸ் காய்ச்சல் ஏற்படும்போது இருமல் மருந்து கொடுக்கக் கூடாது,
* மற்றொன்று எல்லா இருமல்களும் ஒன்றல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வறட்டு இருமல், ஈரப்பத இருமல் (Wet Cough), ஆஸ்துமா என பல காரணங்கள் உள்ளன. இதற்கான மருந்துகளை எடுக்க வேண்டும்.
* மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

செய்ய வேண்டியவை:

* மருந்துவர்களின் பரிந்துரை அவசியம்
* சரியான அளவில் மருந்துகளை உட்கொள்வது அவசியம்
* சரியான மருந்து கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை வாங்க வேண்டும்
* மருந்தின் பின்பக்கம் உள்ள லேபிளில் என்னென்ன மருந்துகள் இருக்கிறது, அவை எந்தெந்த அளவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை சரிபார்க்க வேண்டும்.
* சில சமயங்களில் பெரியவர்களுக்கான மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்துவிடக்கூடும். இதில் 1 மில்லி லிட்டரிலும் கூட அதிகப்படியான மருந்து டோஸ் இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
* தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதியை பார்க்க வேண்டும்
* மருந்தை தயாரித்த நிறுவனத்தின் பெயரை பார்க்க வேண்டும்

எப்போது மருத்துவரை அணுகலாம்?

குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சில அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. அதில்,

* 2 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைக்கு 100.4 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல்
* வேறு எந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கும் 102 டிகிரி பாரன்ஹீட் காய்ச்சல் இருந்தால்
* மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல், வேகமாக சுவாசித்தல்,
* அதீத தலைவலி
* உணவு மற்றும் பானங்களை தவிர்த்தல் (இது சிறுநீர் வெளியேறுவதை குறைக்கும்)
* ஓயாத காது வலி

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

Read Previous

சோறு அல்லது சப்பாத்தி – இரவு உணவுக்கு எது சிறந்தது..??

Read Next

மென்மையான குலாப் ஜாமூன் தயாரிப்பதற்கான சில குறிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular