மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுக்காததால் அதிருப்தியில் இருந்த தவெக நிர்வாகி அஜிதா அக்கட்சியில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ‘இறுதி மூச்சு உள்ள வரை என் தாய் கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும், எம் தலைவர் தளபதி விஜய் அவர்களோடும் மட்டும் தான் எனது அரசியல் பயணம் தொடரும்’ என அஜிதா சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.




