இ.வி கணேஷ் பாபுவின் குறும்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு…!!

இ.வி கணேஷ் பாபு நடித்திருக்கும் ஆசான் குறும்படம் கோவாவில் நடைபெற இருக்கும் 55 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது…

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பதிவுத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 55 வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இதில் இந்தியாவை சேர்ந்த பல நடிகை நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர், இந்த விழாவில் தமிழ்நாட்டிலிருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையிட திரையுள்ளது, தமிழில் தேர்வாகி உள்ள பியூச்சர் ஃபிலிம் இதுதான் இந்த நிலையில் இவ்விழாவில் திரையிட நான் ஃபியூச்சர் ஃபிலிம் பிரிவில் தமிழ் குறும்படமான ஆசான் படமும் தேர்வாகியுள்ளது, நடிகர் கவிஞர் எழுத்தாளர் இயக்குனர் என பன்முகத் திறன் கொண்ட இ.வி கணேஷ் பாபு எழுத்து இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள குறும்படம் ஆசான் ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவி சார்பில் ஜி வனிதா இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார், கணேஷ் பாபுவின் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் எம் கே ராஜனின் ஒளிப்பதிவில் சுராஜ் கவி படத்தொகுப்பில் யூ கே ஐய்யப்பன் ஒலி கலவையில் இப்படம் உருவாகியுள்ளது, மேலும் இப்படத்தை பற்றி இயக்குனர் கணேஷ் கூறியது உலகம் முழுவதிலும் பல திரைப்பட ஆளுமைகள் இந்த திரைப்பட விழாவிற்கு வருகை தருகின்றனர் அவர்களது திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடுகிறது இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் எனது படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் வரும் நவம்பர் 23 அன்று பகல் 12.15 க்கு கோவா பஞ்சு மில் இனாஸ் திரையரங்கில் ஆசான் திரையிடப்படுகிறது என்று கூறியுள்ளார்..!!

Read Previous

ஐயப்ப மாலையுடன் தர்காவில் வழிபட்ட நடிகர் ராம் சரண்..!!

Read Next

கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்ற கதையின் விளக்கத்தை தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular