இதற்கு முந்தைய பதிவுகளில் ஈர்ப்பு விதி என்றால் என்ன. அதற்கும் ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இருக்கும் சம்பந்தத்தை நாம் பார்த்தோம். இந்த பதிவில் ஈர்ப்பு விதியை எப்படி பயன்படுத்துவது அதிலிருந்து நமக்குத் தேவையான விஷயங்களை எப்படி பெற்றுக்கொள்வது என்பதை பற்றி காண்போம்.
முன்பு கூறியது போல் நமது உடல் அலைவரிசைகளால் உருவாக்கப்பட்டவை. இந்த அலை வரிசையில் ஏதேனும் ஒன்று தோன்றினால் அதே போல் இருக்கும் மற்றொரு விஷயத்தை இந்த பிரபஞ்சத்தில் அது எங்கே இருந்தாலும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். இந்த ஈர்க்கும் திறன் இருப்பதால் தன் இதற்கு ஈர்ப்பு விதி என்றே பெயர்.
நாம் சில திரைப்படங்களில் கூறிய வசனங்களை கேட்டிருப்போம். அதாவது நமக்கு ஏதேனும் ஒரு பொருள் வேண்டுமென்றால் அதை நாம் நமக்கு கிடைத்ததாகவே நம்ப வேண்டும். அப்படி அந்த பொருள் நமக்கு மிகவும் முக்கியம் என்றால் இந்த பிரபஞ்சமே சேர்ந்து நமக்கு அதை கொடுக்கும். இது வெறும் வசனம் அல்ல. இதுதான் உண்மையும் கூட.
உங்களுக்கு ஏதேனும் வேண்டுமெனில் அதை மனதார நினைக்க வேண்டும். அப்படி நினைக்கையில் இந்த பிரபஞ்சம் உங்களுடன் ஒன்றாகி அதை உங்களிடம் கொடுக்கும். ஆனால் நாம் ஒருபோதும் தவறாக எதையும் எண்ணக்கூடாது. நமது சிந்தனை எப்போதும் நேர்மறையாக தான் இருக்க வேண்டும். இல்லையெனில் நமக்கு கிடைக்க வேண்டியது நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
எடுத்துக்காட்டிற்கு, நான் பரிச்சையில் தேர்ச்சி பெறாமல் இருந்து வட கூடாது என்று எண்ண கூடாது. அப்படி நினைத்தால் நீங்கள் தேர்ச்சி பெற மாட்டீர்கள். இதற்கு பதிலாக நான் தேர்ச்சி பெற்று விட்டேன் என்று நினைத்து ஆனந்தமாக இருக்க வேண்டும். அப்போது நிச்சயம் நீங்க தேர்ச்சி அடைவீர்கள். இப்படி தான் இந்த ஈர்ப்பு விதியை பயன்படுத்த வேண்டும். இது பல வழிகளில் ஒரு வழி தான். மற்றும் சில முக்கியமான வழிகளை அடுத்த பதிவில் காண்போம்.




