ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஒரு முறை இந்த அரிசி வடை செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

அரிசி வடை செய்வது எப்படி….

தேவையானவை:

இட்லி புழுங்கல் அரிசி – 6 கப், துவரம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 8, தனியா – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, நறுக்கிய சாம்பார் வெங்காயம் – 3 கப், நறுக்கிய கொத்தமல்லித் தழை – கால் கப், எண்ணெய் – பொரிக்க தேவை யான அளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து அதனுடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும். ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு 2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும் (மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது…. ரொம்ப இளக்கமாகவும் இருக்கக் கூடாது). கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.
இதற்கு தக்காளி ரச அடி வண்டல், தயிர் போன்றவற்றை தொட்டுக் கொள்ளலாம்.

 

Read Previous

கேரட் அல்வா ஒருமுறை இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

Read Next

வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular