பொதுவாகவே நம்முடைய சிறுநீரின் நிறத்தை வைத்து நமக்கு என்ன வியாதி இருக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். நிறம் மாற்றத்திற்கு காரணம் நோய்கள் என்றாலும் அந்த நோய்களுக்கு காரணம் என்னவோ உண்ணும் உணவு முறைகளும் ஒரு காரணமாகும். இந்நிலையில் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இல்லை என்றால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் நம் உடலில் ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் மாற்றம் ஏற்படுவது எதில் என்றால் அது சிறுநீரில் தான். எந்த ஒரு நோய் சம்பந்தமாக நாம் மருத்துவரை சந்தித்தாலும் அவர்கள் முதலில் பரிசோதிப்பது நம்முடைய சிறுநீரை தான்.
சிறுநீரில் உள்ள நிறத்தை வைத்து நமது உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள் மருத்துவர்கள். சிறுநீர் கழிக்கும் போது அட சிவப்பு நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ சிறுநீர் காணப்பட்டால் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். எனவே உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. அது மட்டும் இன்றி சிறுநீர் கழிக்கும் பொழுது நுரை போன்று சிறுநீர் வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.பழுப்பு நிறத்தில் சிறுநீர் வந்தால் கல்லீரலில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்றால் அர்த்தம்.




