நம்ம வீட்ல எல்லா பெரியவங்களுக்கும் இருக்கிற ஒரு நோய் தான் சர்க்கரை நோய். இந்த நோய் இல்லாத வீட்ட நம்மால் பார்க்கவே முடியாது. இவ்வளவு ஏன் இப்போயெல்லாம் சின்ன பசங்க கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வராங்க. இப்படி சர்க்கரை வியாதி இருந்தா என்னென்ன சாப்பிடுவது நல்லது என்று உங்களுக்கு தெரியுமா. அதை இந்த பதிவில் காண்போம்.
கேரட் முட்டைகோஸ் சுரக்காய் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் அதில் இருக்கும் நீர் சத்தும் நார் சத்தும் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும். மேலும் கீரை வகைகள் மற்றும் பீன்ஸ் பிரக்கோலி போன்ற காய்களை அதிகமாக நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் காளான் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. நமது உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது நமது கடமையாகும். நமது வீட்டில் இருக்கும் நபர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களுக்கு இந்த காய்கறிகளை கொடுத்து உதவி செய்வோம்.




