இப்போது இருக்கும் இந்த உலகில் வரும் நோய்களுக்கு அளவே இல்லை. இந்த நிலையில் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், சிரியவர்களுக்கு நீரழிவு நோய் பிரச்சனை என்பது அதிகமாகியுள்ளது.பலருக்கு இளவயது மாரடைப்பு மரணமும் நேர்கின்றன.
இதன்காரணமாக, அமெரிக்காவில் இதுதொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது. அதில், அதிக இனிப்பு கலக்கப்பட்ட உணவை குழந்தைகள் சாப்பிடுவது தான் சிறுவயது முதல் பல நோய்களுக்கு வழிவகை செய்கிறது என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு தொடர்ந்து இனிப்பு வழங்கினால் உடல் பருமன், ரத்த அழுத்தம், டைப்-2 சர்க்கரை போன்ற பிரச்சனைகல் உண்டாக்கும். அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக ஒரு நாளைக்கு 17 தே.கரண்டி சர்க்கரையை சேர்த்துக்கொள்கிறது.
இதன்னால், சிறுமிகளுக்கு விரைந்த பருவம், நீரிழிவு நோயின் இரண்டாம் கட்ட அபாயம் போன்ற நோய்களெல்லாம் அதிகரிக்கிறது. கல்லீரல் செயல்பாடுகளையும் இது பாதித்து, மூளையின் செயல்பாட்டுக்கு கேடு தருகிறது. இதனால் அறிவாற்றலும் குறைகிறது.
சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பழச்சாறுகள் போன்ற உணவுகளுக்கு பதிலாக சத்தான உணவுகளை சப்டிலாவது மிகவும் நல்லது.




