உங்கள் முகம் அழகு பெற வேண்டும் என்றால் இதை செய்யுங்கள், இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களின் முகத்திற்காக பல விதமான இயற்கை முறையிலேயே அல்லது செயற்கை முறையில் அழகு படுத்துவதற்கான அத்தனை முறைகளையும் கையாண்டு வருகின்றனர், ஆனால் அந்த அழகுகள் எல்லாம் ஒரு சில நாட்களும் ஒரு சில வருடங்கள் மட்டுமே ஆனால் இயற்கை முறையில் அழகை மேம்படுத்துவதற்கான வழிகள் ஆயிரம் உண்டு அதனை சரிவர பின்பற்றினாலே நமது முகம் அழகாகவும் பளபளப்பாகவும் முகத்தோல் சுருங்காமலும் இருக்கும்..
கற்றாழையை நமது முகத்தில் தேய்த்துக்கொண்டு சிறிது நேரத்தில் முகத்தை கழுவுவதன் மூலம் முகம் பளிச்சென்றும் கருப்புத் தன்மை நீங்கியும் அழகாக தெரியும், அதேபோல் பாசிப்பருப்பு மாவு அரைத்து அதனை முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும், அதேபோல் முகத்தில் கரும்புள்ளிகள் தேம்பல் போன்றவை நீங்குவதற்கு துவரம் பருப்பு 200 கிராம் மஞ்சள் 10 கிராம் சேர்த்து மாவாக அரைத்து வாரம் ஒரு முறை முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தேம்பல் மறையும்..!!



