உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து.. உடல் எடையை குறைக்க டிப்ஸ்..!!
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இதை எல்லாம் பாலோ பண்ணினாலே போதும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒரு ஸ்பூன் புதினா சாறுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து காலை மற்றும் மாலை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைய தொடங்கும். மற்றும் நார்ச்சத்து மிகுந்தது இந்த பானம் உடலை இளைக்கவும் உதவியாக இருக்கும்.
முள்ளங்கியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். பச்சை பட்டாணியில் கொழுப்பை கரைக்கக்கூடிய தன்மை அதிகம் உள்ளதால் தினமும் ஒரு கப் பச்சை பட்டாணி சாப்பிடலாம். பசும்பாலில் இரண்டு பல் பூண்டை நசுக்கி போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் கெட்ட கொழுப்பு குறையும். முக்கியமாக கெட்ட கொழுப்பு குறைவதற்கும் உடல் எடை இளைப்பதற்கும் நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் தினமும் அருந்துவதை ஞாபகத்தில் வைத்து தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியமான ஒன்று.




