பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் அறிக்கை ஒன்றை இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தல் முதல் உடல் உறுப்பு திருட்டு வரை அனைத்தையும் செய்பவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்கள் தான். இத்தகைய சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டிய திராவிட மாடல் அரசு, அத்தகைய குற்றங்களுக்கு துணை போகிறது. இது தான் திமுக அரசின் சாதனை” என்று தெரிவித்துள்ளார்.




