உடுமலை அருகே தேனீக்கள் தாக்கி விவசாயி பலி..!! பெரும் சோகம்..!!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த குரல் குட்டையைச் சேர்ந்தவர் கண்ணப்பன்(74). இவர் நேற்று (செப் -28) ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள குட்டைக்கு மாடு மேய்ப்பதற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த பகுதியில் வந்த மலைத் தேனீக்கள் அவரை சாரமாறியாக கொட்டி உள்ளது.

தேனீக்களின் தாக்குதலில் நிலை குலைந்த கண்ணப்பன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பொது மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மாடு மேய்க்க சென்ற முதியவர் தேனீக்களின் தாக்குதலுக்கு பலியான சம்பவம் குரல் குட்டைபகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

சென்னையில் தயாராகும் புதிய 3 சக்கர (Trike) வாகனம்..!!

Read Next

இளம்பெண் தற்கொலை சம்பவம்..!! தந்தை போலீசில் பரபரப்பு புகார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular