உணவை எப்படி உண்டால் உடலுக்கும், மனதிற்கும் நல்லது தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!! படித்ததில் பிடித்தது..!!

உணவை எப்படி உண்டால் உடலுக்கும், மனதிற்கும் நல்லது?

 

நொருங்கத் தின்றால் நுாறு வயது என்பது ஒரு பழமொழி.

 

இதுதான் உண்மை.

 

சாப்பிடுவது எதுவாக இருந்தாலும், ரசித்து ருசித்து பொறுமையாகச் சாப்பிடுவதைப் பழக்கத்தில் கொண்டு வாருங்கள்.

 

நுாலகத்தில் இருந்து கொண்டு, பந்தாட முடியுமா? அந்தந்த வேலையை அதற்குரிய இடங்களில் செய்யுங்கள்.

 

சாப்பிடும் நேரம் தொலைக்காட்சி பார்க்காதீர்கள். அல்லது வேறொருவருடன் எதைப் பற்றியாவது விவாதித்துக் கொண்டும் சாப்பிட வேண்டாம்.

 

முன்பே கூறியது போல, சாப்பிடும் நேரத்தை சாப்பிடுவதற்காகவே ஒதுக்கி விடுங்கள். உணவைப் பார்த்து , ரசித்து, ஆறுதலாக அதை உண்ணும்போது, உடம்பில் சமிபாடும் எளிதாக இருக்கும்.

 

இன்றைய பல நோய்களுக்கு, அவசர உணவுகள்தானே, அத்திவாரம் போடுகின்றன?

 

நலந்தானா உடலும் உளமும் நலந்தானா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்வதாயின், உங்கள் உணவுப் பழக்கங்களை சற்றே மீளாய்வு செய்யுங்கள்.

 

மதிய உணவு, காலை ஆகாரம், இரவுப் போசனம் என்றல்லவா பிரித்து வைத்திருக்கிறார்கள்? இவற்றில் ஒன்றையும் தவற விடாதீர்கள். அந்தந்த நேரத்தில் அந்தந்த நேர உணவுகளை முடித்து விடுங்கள்.

 

“Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper.”

 

இப்படிச் சொல்பவர்கள் ஆங்கிலேயர்கள்…காலையில் ராஜாவைப் போல உண்டு,மதியம் இளவரசரைப் போல சாப்பிட்டு, இரவில் ஓர் ஏழையின் உணவைப் போல குறைவாக உண்ணுங்கள் என்கிறார்கள் இவர்கள்.

 

எதிலும் ஒழுங்காய் இருந்தால் உடலுக்கும் இதம். உள்ளத்திற்கும் இதம்.

 

உணவு விடயத்திலும் அப்படித்தான்.

Read Previous

தலைவலி சட்டென காணாமல் போக இதை மட்டும் குடிங்க போதும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Read Next

கறிவேப்பிலை மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular